மறைந்த அதிமுக மூத்தத் தலைவர் நெடுஞ்செழியனின் மனைவியும் அதிமுக அமைப்புச் செயலாளருமான விசாலாட்சி நெடுஞ்செழியன் உடல் நலக்குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானார். விசாலாட்சி நெடுஞ்செழியன் கடந்த 15 நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். மரணமடைந்த விசாலாட்சி நெடுஞ்செழியனுக்கு வயது 93. விசாலாட்சி தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் இருந்தவர்.

அதிமுக அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா தொலைபேசி மூலம் அவரது மகனைத் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார். இந்த தகவலை விசாலாட்சி நெடுஞ்செழியனின் மகன் மதிவாணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் அறிக்கையில்,விசாலட்சி நெடுஞ்செழியனின் மறைவு அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.