ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக அறிவித்த சூழலில், ஜப்பான் சென்ற மோடி, அங்கு நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய போது “வீட்டில் திருமணம் நிச்சயித்திருப்பார்கள்.. ஆனால் அதை நடத்துவதற்கு கையில் காசு இருக்காது” என்று பேசி இருக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கீழே அளிக்கப்பட்டுள்ள வீடியோவில் (0.32-0.38) நொடிகளில் மோடி இவ்வாறு பேசி இருப்பதை காணலாம்.

இதனிடையே கோவாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில்”நாட்டுக்காக அனைத்தையும் தியாகம் செய்துள்ளதாக’  கண்ணீருடன் மோடி பேசினார்.

இதனை அடுத்து, மோடி ஜப்பானில் பேசிய வீடியோவை தன்னுடய டிவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ள காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி “முதலில் சிரிப்பு; பிறகு கண்ணீரா’ என்று மக்களின் இன்னல்களைப் புரிந்துகொள்ளாமல் சிரிப்பதாக கேள்வி எழுப்பியுள்ளார்.