பிரபல நடிகர் ஜாக்கிசானின் 56 ஆண்டுகால திரைப் பயணத்திற்கு கவுரவம் அளிக்கும் விதமாக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் ஜாக்கிசானுக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. விருதினை பெற்று கொண்ட ஜாக்கிசான் தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.

ஆஸ்கர் விருது வாங்க வேண்டும் என்ற கனவு நிறைவேறி இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்த ஜாக்கிசான், 23 ஆண்டுகளுக்கு முன்பு சில்வெஸ்டர் ஸ்டாலோனின் இல்லத்தில் அவர் வாங்கிய ஆஸ்கர் விருதை கையில் எடுத்து ஏக்கத்துடன் பார்வையிட்டதை நினைவு கூர்ந்த ஜாக்கி,

“என்னுடைய 56 ஆண்டுகால சினிமா துறை வாழ்க்கையில், 200 படங்களில் நடித்து பல எலும்புகளை உடைத்துக்கொண்ட பிறகு, இந்த விருது என் வசமாகியுள்ளது” என தன்னுடைய பாணி நகைச்சுவை கலந்த உரையை நிகழ்த்தினார்.

சில்வெல்ஸ்டர் ஸ்டாலோன் இந்நிகழ்வுக்கு வந்திருந்து, ஜாக்கியை வாழ்த்தினார்.