போதிய முன்னேற்பாடுகள் இல்லாமல் ரூ.500, 1000 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்து மக்களை பரிதவிக்கவிடும் மோடி அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் ரிசர்வ் வங்கி அலுவலகம் முன்பு நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்திற்கு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி, கைதானார்.

இதேபோல கட்சியின் மாநில, மாவட்டத் தலைவர்கள் தலைமையில் வங்கிகள் அஞ்சல் அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.