மத்திய அரசு எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாமல் கடந்த 8.11.2016 அன்று திடீரென ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்துவிட்டு புதிய ரூ-.2000ஐ வழங்கி வருகிறது. ஒரு வாரத்திற்கு மேலாகியும் நிலைமை கொஞ்சமும் சீராகவில்லை. நோயாளிகள், மூத்த குடிமக்கள், பெண்கள் என கோடிக்கணக்கான மக்கள் தினந்தோறும் வங்கிகளின் முன்பு தங்களின் சேமிப்பு பணத்தை மாற்றுவதற்காக மணிக்கணக்கில் நிற்கும் நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. மேலும் மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து இவ்விஷயமாக இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.
மத்திய அரசின் கையாலாகத்தனத்தையும், நாட்டு மக்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி அவர்களைப் பிச்சைக்காரர்களாக்கி வங்கிகள் முன் நிறுத்தி அலைக்கழித்து வருவதைக் கண்டித்தும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னையில் ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் போராட்டம் பொதுச் செயலாளர் அப்துல் சமது தலைமையில் நடைபெற உள்ளது என செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
நாள்: 18-.11.2016, நேரம்: மாலை 4:00 மணியளவில்
கூடும் இடம்: பாரத ஸ்டேட் வங்கி (SBI) அருகில், பாரிமுனை
முகப்பில் கோப்புப் படம்.