கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ.500. ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். தங்களிடம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் வங்கிகளை நாடி வருகின்றனர். ஏடிஎம்களில் பணம் எடுப்பதும் கடினமாக உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலை நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில், ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் இல்லாததால் கோபமான மக்கள் அங்குள்ள ஏடிஎம் இயந்திரம் ஒன்றிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மலர் வளையத்தோடு,“தனது காலத்திற்கு முன்னரே எங்களை விட்டுச்சென்ற ஏடிஎம் இயந்திரத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்; இறுதி அஞ்சலி, ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி நாடு திரும்பியவுடன் நடக்கும்” என்று எழுதியுள்ளனர். இது படமாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாக பரவி வருகிறது.