பொதுத் துறை வங்கியான எஸ் பி ஐ 63 தொழிலதிபர்களின் வாராக் கடனை தள்ளுபடி செய்ய உத்தேசித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மக்கள் நூறு ரூபாய்க்கு அலைந்துகொண்டிருக்கும் நிலையில் ரூ. 7000 கோடி வாராக் கடன் தள்ளுபடி அறிவிக்கலாமா என சமூக ஊடகங்களில் மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சில பதிவுகள் இங்கே…

எழுத்தாளர் மாலதி மைத்ரி தன்னுடைய முகநூலில் எழுதியுள்ள பதிவு:

SBI தலைவர் ஏழை மல்லையாவின் வாராக்கடன் 1201 கோடி உட்பட 63 கோடிஸ்வர ஏழைகளின் 7,016 கோடியைத் தள்ளுபடி செய்திருக்கிறார்.

சிறு வணிக, விவசாய, தொழிலாளர் சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை ஏன் அறிவிக்கக் கூடாது.

வங்கி கணக்கை மூடும் போராட்டம் தொடங்குவோம் மக்களே. மக்களிடம் பிடுங்கி மாபியாவுக்கு கொடுக்கும் பகல் கொள்ளையை அனுமதியோம். புதுவையிலுள்ள என் SBI கணக்கை மூடப் போகிறேன்.”

வாசுகி பாஸ்கர்:

விஜய் மல்லையா உட்பட 7 016 கோடியை SBI writes off என செய்தி வருகிறது, writes off என்றால் தள்ளுபடி இல்லை, ஆனால் negotiation இருக்கும், செலுத்துதப்பட வேண்டிய தொகையை தவணைகளில், குறைத்து செலுத்துவதற்கான வசதிகள் இதில் உண்டு!

நாடு நல்லா இருக்க முப்பது பேர் சாக மாட்டிங்களா, வரிசையில் நிக்க மாட்டாங்களா என கேள்வி கேக்குற கூமுட்டைங்க எல்லாம், மல்லையா வீட்டுக்கு ஆளை அனுப்பி, உளவியல் ரீதியா சாக அடிச்சி, அசிங்க படுத்தி, மல்லையா தூக்கு மாட்டி சாகுற அளவு எல்லாம் கொண்டு போக மாட்டாங்க, கொடுக்கிறதை கொடுங்கன்னு கேஸை முடிப்பாங்க!

சாகுறதுக்கு நாம தான்! ரெண்டு due கட்டாம விட்டு பாருங்க, கலெக்ஷன் மேனேஜர் நாக்கை புடுங்குற மாதிரி கேப்பான்!

ஆனா நம்புங்க, இது எல்லாமே நம்ம நல்லா இருக்கிறதுக்கு!

Stay Calm and stay, Modi is Awesome!

Natarajan: 

பொதுத்துறை வங்கிகள் வாராக்கடன் கணக்குகளை முடிக்க இரண்டு வழிகள் வைத்திருக்கின்றன.

  1. ரிலையன்ஸ் நிறுவனத்துக்குக் கடனைப் பாதிக்கு விற்று, கடன் வாங்கியவர்களிடம் கெடுபிடியாக அவர்களை வசூலிக்கச் செய்வது. இது ஏழை மாணவர்கள் கடன் கணக்கை முடிக்கும் வழி.

  2. வாராக்கடன் ஆயிரமாயிரம் கோடிகளாக இருந்தாலும் தள்ளுபடி செய்வது. இது மல்லையாக்களுக்கான கடன் கணக்கை முடிக்கும் வழி.

வாழ்க பாரதம்!