ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்த கரட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராமலிங்கம். தண்ணீரின்றி காணப்பட்ட மஞ்சள்பயிரை கண்டு மனமுடைந்த அவர், கடந்த வாரம் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் மற்றொரு விவசாயி முத்துசாமியும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அதிகாலையில் தோட்டத்திற்கு சென்ற அவர் கருகிய பயிரை கண்டு மனமுடைந்து விஷமருந்தை குடித்து இறந்திருக்கிறார்.

கொடுமுடி பகுதி காளிங்கராயன் அணையை நம்பி விவசாயம் செய்கிறவர்கள்.