மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த புகாரில் தேடப்பட்டு வந்த வேந்தர் மூவிஸ் மதன் திருப்பூரில் கைது செய்யப்பட்டார். காவல்துறை ஆணையர் ஜார்ஜ் இந்தத் தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இன்று மாலை நீதிமன்றத்தில் மதன் ஆஜர்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.