புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளி கிருஷ்ணா காலமானார். இவருக்கு வயது 86. பத்ம விபூஷன் விருது பெற்றுள்ள அவர், இரண்டு முறை தேசிய விருதும் பெற்றுள்ளார்.

1930ம் ஆண்டு ஆந்திர மாநிலம் சங்கர குப்தம் என்ற ஊரில் பிறந்த இவர் தனது 6 வயதில் இசைப் பயணத்தை தொடர்ந்தார். இளையராஜாவின் இசையில் கவிக்குயில் படத்தில் ‘சின்ன கண்ணன் அழைக்கிறான்’ என்ற பாடலையும் பாடியுள்ளார். இதேபோல் ‘திருவிளையாடல்’ படத்தில் பாடிய ‘ஒரு நாள் போதுமா’ உள்ளிட்ட பாடல்கள் மிகவும் பிரபலம். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பல பாடல்கள் பாடியுள்ளார். 400 படங்களுக்கு இவர் இசையமைத்திருக்கிறார்.

வயோதிகம் காரணமாக ஓய்வெடுத்து வந்த வந்த அவர் இன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.