கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. தேர்தலில் போட்டியிடாத நிலையில் முதல்வராக நாராயணசாமி பதவியேற்றார். 6 மாதங்களுக்குள் அவர் எம்.எல்.ஏவாக வேண்டும் என்ற நிலையில் நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார், நாராயணசாமிக்காக தனது பதவியை ராஜிநாமா செய்தார். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடைபெற்றது.  இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி  எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகரை விட 11, 144 வாக்குகள் அதிகம் பெற்று,  வெற்றி பெற்றிருக்கிறார்.