தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர்.  கிட்டத்தட்ட 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவை வீழ்த்தியது அதிமுக.

இந்த மூன்று தொகுதிகளிலும் டெபாசிட்கூட பெறாத அதிகபட்சம் ஆறாயிரம் வாக்குகள் பெற்ற பாஜக மூன்றாம் இடத்துக்கு வந்திருப்பதாக ஊடகங்கள் தலைப்புச் செய்தி வெளியிடுகின்றன.

மூன்று தொகுதிகளிலும் பாஜக பெற்ற வாக்கு விவரம்:

அரவக்குறிச்சியில் பாஜக வேட்பாளர் பெற்ற வாக்குகள் : 3162 

தஞ்சாவூர்: 3806 வாக்குகள்

திருப்பரங்குன்றம்:  6930 வாக்குகள்

டெபாசிட்கூட பெறாத வாக்குகளைப் பெற்ற கட்சியை மூன்றாவது கட்சியாக ‘வளர்ந்திருப்பதாக’ ஊடகங்கள் சிலாகிப்பதன் பின்னணி குறித்து சமூக ஊடகங்களில் வந்த சில கருத்துகள்…

பேராசிரியர் அ. ராமசாமி:

மூன்று தேர்தல்களிலும் மூன்றாவது இடம். பா.ஜ.க. கொண்டாடுகிறது; பா.ஜ.க.வைவிடக் கூடுதலாகக் கொண்டாடுகின்றன தமிழ்நாட்டு ஊடகங்கள். தேசியக்கட்சியின் தேவையை உணர்ந்து விட்டார்கள் – உணர்த்துகிறார்கள் எனவும் பார்க்கலாம். ஆளுங்கட்சியை ஆதரிப்பதுதான் தங்கள் நிலைபாடெனக் காட்டுகிறார்கள் எனவும் புரிந்துகொள்ளலாம்.

எழுத்தாளர் மதிமாறன்:

‘பாஜக 3 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது’ என்று சொல்வதற்கு பதில் ‘3 ஆவது இடம்’ என்று ஊடகங்கள் சொல்வது திட்டமிட்ட மோசடி.

பத்திரிகையாளர் அருள் எழிலன்:

மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது பாஜக. இதை இப்படிக் கூடச் சொல்லலாம் //மூன்றிலும் டெப்பாசிட் இழந்தது பாஜக// //டெப்பாசிட் இழந்த கட்சிகளில் முதலிடம்//

சமூக-அரசியல் செயல்பாட்டாளர் ரபீக் ராஜா:

மூன்று தொகுதிகளிலும் தேமுதிக வைப் பின்னுக்குத்தள்ளி பாஜக மூன்றாவது இடம் – புதியதலைமுறை

இதை ஒரு செய்தியாகச் சொல்ல உங்களால் எப்படி முடிகிறது?

உங்கள் விசுவாசம் படுமோசமானது.

ராஜேஸ் டி:

மூன்று தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தாலும் பாஜக மூன்றாவது இடம் என்று தம்பட்டம் அடிக்கப்படுகிறது. இதை விட ஸ்பெஷல் ஒன்னு இருக்கு,பார்ப்பனருக்கு மட்டுமே கல்வி கற்கும் உரிமை என்ற நிலை இருந்த போது அவர்கள் மட்டுமே கல்வியில் முதலிடத்தில் இருந்தனர், ரன்னிங் ரேசில் ஒருவன் மட்டுமே கலந்து கொண்டு ஒத்தையாளாக ஓடி முதல் பரிசு பெற்றதைப் போல.

ஆரிஃப் வக்காஸ்:

பாஜக மூன்று தொகுதியிலும் மூன்றாவது இடம்
மூன்று தொகுதியிலும் டெபாசிட் இழப்பு

ஆப்ரேசன் சக்ஸஸ்
ஆனால் பேஷன்ட் அவுட்
மொமன்ட்

முகவை மூசா முபாரக்: 

தேமுதிகவை முந்திய பாஜக 3 தொகுதிகளிலும் 3-ம் இடம் ..

– தி இந்து, தமிழ் பத்திரிகை


ஆமா தெரியாம தான் கேக்குறேன்… மூன்று தொகுதியிலும் படுதோல்வியை தழுவிய தேசிய ஆளும்கட்சி பாஜக மூன்றாவது இடம் என்று நீங்கள் யாருக்கு ஆறுதல் சொல்கிறீர்கள்?

உங்களுடைய குட்டு வெளிப்பட்டு நாளாச்சு தி இந்துத்துவா பத்திரிகையே!
கோவை கலவரத்தில் செல்போனை திருடியவர்கள் , பங்களாதேஷிகள்னு சொன்னவங்கதானடா நீங்க !

Thiru Brahmma: 

இடைத்தேர்தலில் ஒரு சதவிகிதம் ஓட்டு வாங்கி, பா.ஜ.க. மூன்றாவது இடம் வந்தால் என்ன? நான்காவது இடம் வந்தால் என்ன? டெபாசிட் வரவில்லையே?