பிரதமர் மோடியின் தடாலடி அறிவிப்பால், நாடு முழுவதும் நீடித்துவரும் ரூபாய்த்தாள் பிரச்னையைத் தீர்க்கக்கோரி, இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து வரும் 24ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு மக்களைத் திரட்டி போராட்டம், பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளன.

இந்திய கம்யூ. கட்சி, இந்திய கம்யூ. கட்சி(மா), இ.க.க.(மா-லெ- விடுதலை), புரட்சிகர சோசலிசக் கட்சி, பார்வர்டு பிளாக், எஸ்.யு.சி.ஐ.(சி) ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில், இன்று புதுதில்லியில் இது குறித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இ.க.க.(மா) மாநிலச் செயலர் ஜி.இராமகிருஷ்ணன் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.