சிவகங்கை (கத்தோலிக்) மறை மாவட்டத்தில் தலித் கிறிஸ்தவர் பகுதியில் இருந்து ( தேவேந்திர குல வேளாளர்) எவருக்கும் “அருட் பொழிவு” குரு பட்டம் வழங்க 28 வருடங்களாக மறுக்கப்படுகிறது. 13 வருட பயிற்சிக்குப் பிறகு மைக்கேல் ராஜா என்ற தலித் கிறிஸ்தவருக்கு அருட் பொழிவுபட்டம் மறுக்கப்பட்டு திருச்சி குருமடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இவரைப் போன்றே இதற்கு முன்பும் 15 தலித் கிறிஸ்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 13 ஆண்டுகள் பயிற்சி பெற்ற குரு மாணவரை எவ்வித ஆதாரமும் இன்றி, விசாரணையுமின்றி, செய்யாத குற்றத்திற்கு ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் மறை மாவட்டத்தை விட்டு வெளியேற்றியது அநீதியானது. இந்த அநீதிக்கு எதிராகவும் சிவகங்கை மறை மாவட்ட நிர்வாகத்தின் தீண்டாமைக் கொடுமை யைக் கண்டித்தும், மைக்கேல் ராஜா வுக்கு நீதி கேட்டும் நவம்பர் 23 புதன ன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் இராமநாதபுரம் மாவட்டக் குழு சார்பில் அரண்மனை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் என்.கலை யரசன் தலைமை வகித்தார்.

மாநிலத்தலைவர் பி.சம்பத் கலந்து கொண்டு பேசியதாவது: கத்தோலிக்க மதம் உலகளாவிய மதம். சுதந்திரப் போராட்டக் காலத்தில் இந்தியாவில் கல்வி உள்ளிட்ட உதவிகளை கிறிஸ்தவ சபைகள் மக்களுக்கு வழங்கின. இந்தப் போராட்டம் மறை மாவட்ட கத்தோலிக்க நிர்வாகத்தில் நிலவும் தீண்டாமையை கைவிடவும் மைக்கேல் ராஜாவுக்கு நீதி கேட்டும் நடப்பதாகும். பிரச்சனையை தீர்க்க வேண்டியது கத்தோலிக்க சிவகங்கை மறைமாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பு. இந்து மதத்தில் நிலவும் ஒடுக்கு முறைகள் காரணமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தீண்டாமை கொடுமை தொடர்கிறது. இராமநாதபுரம் உள்ளிட்டு மாநிலம் முழுவதும் இரட்டை குவளை, இரட்டைக் கல்லறை என 88 வகையான தீண்டாமைக் கொடுமைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இவற்றிற்கு எதிராக தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராடி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் வான் தமிழ் இளம்பரிதி, சிபிஎம்(எல்) மாவட்டச் செயலாளர் கே.பூவலிங்கம், வி.சி.க. மண்டல நிர்வாகி யாசின், ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் தி.க. சிவக்குமார், தலித் கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பு நிர்வாகி அருள்தாஸ், தமிழ்ப்புலிகள் மாவட்டச் செயலாளர் தமிழ்முருகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் இ.கண்ணகி, சி.ஆர்.செந்தில்வேல், ஆதிரத்தினம், தட்சிணாமூர்த்தி, ஆர்.குருவேல், எம்.ராஜ்குமார் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மதுரையில் கே.புதூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா. அண்ணா துரை தலைமை வகித்தார். ஆதித்தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் கு.ஜக்கையன், தலித் கிறிஸ்தவமக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர் வேதராஜ், தமிழ்அகிலன் ( புரட்சி புலிகள்), சாதி ஒழிப்புமுன்னணியின் மாவட்டச் செய லாளர் தெய்வம்மாள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் க.கண்ணன், தலித் கிறஸ்தவ ஒருங்கிணைப்பாளர் சந்தனமேரி ஆகி யோர் போராட்டத்தை ஆதரித்துப் பேசினர்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்டத் தலைவர் ம.பால சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் த.செல்லகண்ணு, மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுதாய், மாநிலக் குழு உறுப்பினர் மா.கணேசன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தலித் கிறிஸ்தவர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நன்றி: தீக்கதிர்.