ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறும் மத்திய அரசின்த அறிவிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைச் சமாளிக்க ஏழைகளுக்கு செல்போன் அளிக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்வைத்துள்ளார். ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கி மற்றும் வங்கி அதிகாரிகளுடன் சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காகிதமில்லா பணபரிமாற்றத்துக்கு குறைந்தபட்சம் செல்போன் தேவை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனால் ஏழைகளுக்கு செல்போன் கொடுக்க முடிவு செய்துள்ளோம்’ எனத் தெரிவித்தார்.

ரூபாய் நோட்டு பிரச்சினைக்கு செல்போன் அளிப்பது தீர்வென கருதும் ஆந்திர முதல்வர்,அரசு மருத்துவமனையில் போதிய ஸ்ட்ரெச்சர் இல்லாமல் அவதிக்குள்ளாகும் மக்களுக்கு என்ன நடவடிக்கை எடுத்தார் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்த்பூர் அரசு மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்ட தன் கணவரை முதல் மாடிக்கு அழைத்துச் செல்ல ஸ்ட்ரெச்சர் மறுக்கப்பட்டதால், அவரது மனைவி இழுத்துச் சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.