500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன்மூலம் மக்களின் வயிற்றில் அடித்த மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக நவம்பர் 24 முதல் 30வரை அகில இந்திய அளவில் தீவிரமான கிளர்ச்சி இயக்கங்களை மேற்கொள்ள இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத் துள்ளன.இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(எம்எல்)-லிபரேசன், புரட்சி சோசலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், எஸ்.யு.சி.ஐ.(கம்யூனிஸ்ட்) ஆகிய கட்சிகளின் தலைவர்கள் செவ்வாய் அன்று சந்தித்து, ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன் மூலம், மக்களின் மீது, குறிப்பாக விளிம்புநிலையில் உள்ள மக்களின் மீது கடும் தாக்குதலைத் தொடுத்துள்ள மத்திய அரசுக்கு எதிராக, அகில இந்திய கிளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டிட இடதுசாரிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

தங்களின் அன்றாட பரிவர்த் தனை நடவடிக்கைகளுக்கு, ரொக்கப்பரிவர்த்தனையையே முழுமையாக நம்பி வாழ்ந்து வந்த, உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவினர், மீனவர்கள், விவசாயத் தொழிலாளர்கள், நாட்கூலி பெறுவோர், மகாத்மா காந்திகிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச்சட்டத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் நாட்டுப்புற உழைப்பாளி மக்கள் அரசின் இந்நடவடிக்கையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மிகவும்கொடூரமான முறையில் வறிய நிலைக்கும் வறுமை நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஏற்கனவே 70 பேர் இறந்துள்ளனர்.

முறையான முன்தயாரிப்பு எதுவும் மேற்கொள்ளாமல், மத்திய அரசு இந்த அறிவிப்பினைச் செய்துள்ளது. இரு வாரங்கள் கழிந்தநிலையிலும்கூட, செல்லாது என்று அறிவிக்கப்பட்ட கரன்சி நோட்டுகளின் மதிப்பில் 10 சதவீதம் மட்டுமே வங்கிகளுக்கு வந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இதன்விளைவாக தங்களுடைய அன்றாடத்தேவைக்கு எவ்விதமான பணத்தையும்செலவு செய்ய முடியாமல் கோடிக்கணக்கான மக்கள் மிகவும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் வரும்2016 டிசம்பர் 30 வரையிலோ அல்லதுபுதிய ரூபாய் நோட்டுகள் முழுமையாக புழக்கத்திற்கு வரும் வரையிலோ பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை அனுமதித்திட வேண் டும் என்று இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்துகின்றன.

கிராமங்களின் உயிர் கூட்டுறவு வங்கிகள்

கிராமப்புற மக்களின் நிதிப் பரிவர்த்தனைகளில் உயிரோட்டமாகச் செயல்பட்டுவரும் கிராமப்புற கூட்டுறவு வங்கிகளையும் அனைத்து வங்கி செயல்பாடுகளுக்கும் அனுமதித்திட வேண்டும் என்றும் இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்துகின்றன.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, நவம்பர் 24 முதல் 30 வரை அகில இந்திய அளவில் மக்களைத் திரட்ட கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதெனவும் இடதுசாரிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும், வங்கிகளில் செயல்படா சொத்துக்கள் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ள – பணக்காரர்களுக்கு வழங்கப் பட்டுள்ள – 11 லட்சம் கோடிரூபாயையும் திரும்பப் பெற உடனடியாக நடவடிக்கைஎடுத்திட வேண்டும், அவ்வாறு கடன் பெற்றவர்களின் சொத்துக் களை அரசுடைமையாக்கிட வேண்டும், சஹாரா-பிர்லா ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ள விவரங்கள் குறித்து புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும். வரி ஏய்ப்புக்கு வகைசெய்திடும் இரட்டை வரி ஒப்பந்தங்களை ரத்து செய்திட வேண்டும், வெளிநாடுகளில் கணக்கு வைத்திருப்போர் பெயர்களை வெளியிட வேண்டும், அவர் களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும்இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தி யுள்ளன.

இவ்வாறு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காது கறுப்புப் பணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பதாக மத்திய அரசு கூறுவது வெற்று ஆரவார நட வடிக்கையே தவிர வேறல்ல. மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்ப த்திற்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்கிட வேண்டும்.மத்திய அரசின் நடவடிக்கை யை எதிர்த்திடும் அனைத்துப் பகுதி யினரும் இந்நடவடிக்கையில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் அறைகூவி அழைக் கின்றன. இவ்வாறு இடதுசாரிக் கட்சியின் கூட்டறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

நவம்பர் 28 -அகில இந்திய எதிர்ப்பு நாள்

இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டிருப்பதாவது: நவம்பர் 24 முதல் 30 வரை ஒருவார காலம் நாடு முழுவதும் கிளர்ச்சி நடத்துமாறு இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ள பின்னணியில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தனித்தனியே நவம்பர் 28 அன்று அகில இந்திய எதிர்ப்பு நாள் அனுசரிக்குமாறு அறைகூவல் விடுத்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நவம்பர் 28 அன்று அகிலஇந்திய எதிர்ப்பு நாள் அனுசரிக்கு மாறு அனைத்துக் கிளைகளுக்கும் அறைகூவல் விடுக்கிறது. மக்களின் பெரும்திரள் ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக்கள், இந்திய ரிசர்வ் வங்கி முற்றுகை, மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை, சாலை மறியல், ரயில் மறியல், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பொது வேலை நிறுத்தம் போன்றவற்றை கடைப்பிடித்திட கட்சியின் மாநிலக் குழுக்கள் தீர்மானித்திடும். இந்த நடவடிக் கைகளை இதர இடதுசாரிக் கட்சி களுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நன்றி: தீக்கதிர்.