ராமமூர்த்தி

அரியானா மாநிலம் குர்கான் பகுதியில் உள்ள மந்தவார் கிராமத்தினுள் ஆரவல்லிமலைக் காட்டிலிருந்து வழிதவறிய சிறுத்தை நுழைந்துவிட்டது…

குர்கான் என்பது மிக தொலைதூர இமயமலைக்காட்டுப் பகுதியில்லை நமது தலைநகர் டெல்லிக்கு மிக அருகிலிருக்கும் இடம்தான்….

சிறுத்தை நுழைந்த தகவலை கேள்விப்பட்ட அருகருகே உள்ள கிராம மக்கள்
1500 பேர் சேர்ந்து கோடாரி மற்றும் கம்புகளால் சிறுத்தையை தாக்கி அடித்தே கொன்றிருக்கிறார்கள்…

அதுவும் காவல்துறை மற்றும் வனத்துறையினர் முன்பாகவே இது நடந்திருக்கிறது அவர்களால் இந்த மனிதர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதுதான் இந்த சம்பவத்தின் உச்ச கட்டம்…

வனத்துறையினர் சிறுத்தை பிடிக்க வைத்த கூண்டினுற்குள்ளேயே சிறுத்தை எரிக்கப்பட்ட இடத்தில் வெப்பம் இன்னும் ஆறக்கூட இல்லாத நிலையிலேயே அடுத்து இது நடந்திருக்கிறது…

சட்டம் எல்லாம் இங்கு நம்ம தென்னிந்தியாவில்தான் வட இந்தியாவில் சட்டத்தைப்பற்றிய பயம் இல்லையா?

அல்லதுசட்டப்படி நடவடிக்கை எடுப்பது இல்லையா ?

அல்லது எந்த விழிப்புணர்வும் அந்த மக்களுக்கு இல்லையா எனத் தெரியவில்லை….

தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதைப் பார்க்கும்போது அங்குள்ள வனத்துறையினர் என்னசெய்கிறார்கள் எனவும் தெரியவில்லை…

இங்கு கூட நம்ம வேலூரில் மருத்துவ மாணவர்களால் குரங்கு எரிக்கப்பட்ட சம்பவத்தை எப்படிப் பார்ப்பது ?

மனிதனின் மன நிலைதான் இதெற்கெல்லாம் காரணமா?
மனிதன் வேட்டை சமூகத்தில் இருந்து வந்த மிச்சத்தின் வெளிப்பாடா ?

எப்படி இருந்தாலும் ஒட்டுமொத்த மக்களிடம் சரிசெய்யப்பட வேண்டியது உளவியல் பிரச்சனையைத்தான்…

ஏற்கனவே அறியாமையால் சிவிங்கிப்புலி உள்ளிட்ட பல விலங்குகளையும் பல கண்டுபிடிப்பு பட்டியலிலேயே இல்லாத பறவைகளையும் இழந்து உயிர்ச்சங்கிலி சின்னாபின்னமாகிவிட்டது
அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்….

இப்படியே விலங்குகள் பறவைகளை ஒவ்வொன்றாக ஒழித்து காடுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருங்கால சந்ததிக்கு இருக்குமிடத்தையெல்லாம் பாலைவனமாக்கி கொடுக்கப்போகிறோம்… அப்போது காற்று இருக்கும் உயிர்வாழத் தேவையான ஆக்ஸிஜன் அதிலிருக்காத நிலையும் வரும்…. குடிநீரைப்போல் காற்றையெல்லாம் காசுகொடுத்து வாங்கமுடியாது… காசு இருக்கும்… காற்று இருக்காது

ராமமூர்த்தி, சூழலியல் செயல்பாட்டாளர்.