கியூப புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைதி ஊர்வலம் நடத்துகிறது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு:

தோழர் பிடல் காஸ்ட்ரோ மறைவையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அமைதி ஊர்வலம் இன்று (26.11.2016) மாலை 4.30 மணிக்கு சென்னையில், கடற்கரை சாலை, உழைப்பாளர் சிலை அருகிலிருந்து துவங்கும். இந்த அமைதி ஊர்வலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் மாநிலத் தலைவர்கள், வடசென்னை, தென்சென்னை கட்சித் தோழர்கள், பொதுமக்கள் பங்கேற்பார்கள்.

நாள் : 26.11.2016

நேரம் : மாலை 4.30 மணி

இடம் : உழைப்பாளர் சிலை அருகில்,
கடற்கரை சாலை,