மக்கள் கவிஞர் என புகழப்படும் இன்குலாப் காலமானார். உடல்நலக் குறைவுக் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கவிஞர் இன்று உயிரிழந்தார்.

பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் என பன்முகம் கொண்ட இன்குலாப். சிற்பி இலக்கிய விருது உள்ளிட்ட சில விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.