இலங்கையை சேர்ந்த இயக்குனர் பிரசன்ன விதானகேயின் சமீபத்திய படமான “சைலென்ஸ இன் தி கோர்ட் (Silence in the Courts) எதிர்வரும் ஞாயிறு மாலை திரையிடுகிறது தமிழ் ஸ்டுடியோ. சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல விருதுகளை வென்றுள்ள இந்த படம், விக்டர் இவான் என்கிற பத்திரிகையாளர் எழுதிய புத்தகத்தின் தாக்கத்தில் எடுக்கப்பட்டது. நீதிபதிகளால் வன்புணர்வு செய்யப்பட்ட இரண்டு பெண்களுக்கு மறுக்கப்பட்ட நீதியை இந்த படம் பேசுகிறது. டொராண்டோ, மெல்போர்ன், ஒட்டாவா ஆகிய முக்கியமான திரைப்பட விழாக்களில் இந்த படம் மனித உரிமைக்கான விருது பெற்றுள்ளது. திரையிடல் முடிந்ததும் இயக்குனருடன் கலந்துரையாடலையும் தமிழ் ஸ்டுடியோ ஏற்பாடு செய்திருக்கிறது.

04-12-2016, ஞாயிறு, மாலை 6 மணிக்கு.

பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.