மத்திய அரசின் செலாவணி நீக்க அறிவிப்பு பல உயிர்களை பலிவாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கொலைகளையும் நிகழ்த்தி வருகிறது. ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ரங்கிபூர் என்ற ஊரில் புதிய ரூபாய் நோட்டுக்களில் வரதட்சணை பணத்தை தரவில்லை என்பதற்காக மணப் பெண், மணமகன் வீட்டீனரால் கொரடூரமாக படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

மோடியின் அறிப்புக்கு அடுத்த நாளான நவம்பர் 9-ஆம் தேதி பிரபதி என்ற பெண்ணுக்கும் அதே ஊரைச் சேர்ந்த லட்சுமி நாயக் என்பவருக்கு திருமணம் நடந்திருக்கிறது. பழைய நோட்டுகள் செல்லாது அறிவிப்பு அறியாத நிலையில் வரதட்சணைப் பணம் ரூ. 1.70 லட்சத்தை பழைய நோட்டுக்களாக பிரபதி தந்தை கொடுத்திருக்கிறார். இதை வாங்க மறுத்தி, திருமணம் நடந்தது முதல் பிரபதை துன்புறுத்தி வந்த மணமகன் குடும்பத்தார, அவரை அடித்து கொன்றுள்ளனர்.

மணமகனின் குடும்பத்தார் மீது வரதட்சனை தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.