முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் முதலமைச்சரின் உடல்நிலை மிக மிக மோசமாக உள்ளதாக தெரிவித்திருக்கிறார். சர்வதேச தரத்தில் சிகிச்சையளித்தும் பலனில்லை எனவும் அதிகபட்சமாக என்ன செய்ய முடியுமோ அதை செய்தாகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

beale

அப்பலோ செயல் இயக்குநர் சங்கீதா ரெட்டி, இதே கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிய நேரில் செல்கிறார். மருத்துவமனைக்கு சென்று திரும்பும்போது செய்தியாளர்களை சந்தித்து முக்கிய முடிவுகளை அறிவிக்க உள்ளார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

photo shiv aroor via twitter .