முதலமைச்சரின் உடல்நிலை குறித்து இன்று மதியம் அப்பலோ அறிக்கை வெளியிட்டிருந்தது. முதலமைச்சரின் உடல்நிலை உயிர்காக்கும் கருவிகளின் உதவியால் சீராக்கப்பட்டிருப்பதாகவும் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அப்பலோ செயல் இயக்குநர் சங்கீதா ரெட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் மருத்துவர்களின் தொடர் முயற்சிகளுக்குப் பிறகும் முதலமைச்சரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.