தமிழக முதல்வரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பாதுகாப்புக் கருதி சென்னைக்கு கூடுதலாக 2 ஐ.ஜி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சாரங்கன் மற்றும் ஜெயராமன் ஆகியோர் சென்னை காவல்துறையின் புதிய ஐ.ஜி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து காவல் அதிகாரிகளும் அடுத்த உத்தரவு வரும் வரை பணியாற்ற வேண்டும் என ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, பெங்களூரில் இருந்து துப்பாக்கி ஏந்திய 1,500 துணை ராணுவப் படையினரை மத்திய அரசு அனுப்பியுள்ளது.