மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் ஜெயலலிதா பலனின்றி காலமானதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக கொடி அரைக்கம்பத்தில் பறப்பதாகவும் செய்தி வெளியிடுகின்றன.

ஆனால் முதலமைச்சருக்கு சிகிச்சை அளிக்கும் அப்பலோ மருத்துவமனையின் ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சரின் உயிர்காக்கும் நடவடிக்கையில் மருத்துவமனை மருத்துவர்கள் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பலோ அறிவித்துள்ள அறிக்கையில் ஊடகங்களில் வெளியானது தவறான செய்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரைக் காப்பாற்ற எய்ம்ஸ் மருத்துவர்களும் ஈடுபட்டிருப்பதாகவும் அச்செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.