முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் மிகவும் கவலைக்கிடமாக இருந்துவரும் நிலையில் இன்று காலை அதிமுக எம் எல் ஏக்கள் கூட்டம் தலைமையின் அழைப்பின் பேரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தவர் ஓ. பன்னீர் செல்வம் என்றும் இந்தக் கூட்டத்தில் முதல்வராக தன்னை ஆதரிக்கவேண்டும் என்று எம் எல் ஏக்களிடம் கையெழுத்து வாங்கினார் என்றும் இந்தியா டுடே இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக தலைமையகத்தில் இன்று மாலை எம் எல் ஏக்கள் கூட்டம் மீண்டும் நடைபெற இருக்கிறது. இதில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.