முதலமைச்சர் ஜெயலலிதா டிச.5 அன்று இரவு 11.30 மணிக்கு இறந்துவிட்டார் என அப்பல்லோ மருத்துவமனை சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மாலையில் அவர் இறந்துவிட்டதாக சில தொலைக்காட்சிகள், இணையதளங்களில் தகவல் வெளியானபோதிலும், அப்பல்லோ நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அதையடுத்த 6 மணி நேரத்தில் ஜெயலலிதாவின் உயிரிழப்பு உறுதிசெய்யப்பட்டது.

முன்னதாக, 11.10 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையின் நிறுவனர் பிரதாப்ரெட்டியும் தொடர்ந்து சசிகலாவும் அவரின் உறவினர்களும் மருத்துவமனையிலிருந்து வெளியேறினர். எய்ம்ஸ் மருத்துவர்களும் அங்கிருந்து சென்றனர். அதன் பிறகே மரண அறிவித்தல் வெளியிடப்பட்டது.