உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார். இதையடுத்து அவரது இறுதிச்சடங்குகள் சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ராஜாஜி இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி அவருடைய உடல் வைக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 6) முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.