மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு சென்னையில் நடைபெறவுள்ளது. முன்னதாக, அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக சென்னையில் ஏற்கெனவே 15,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் வெளிமாவட்டங்களில் உள்ள ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், இளைஞர் படையினர், அதிவிரைவு படையினர், அதிரடிப் படை உள்பட பல்வேறு பிரிவுகளைச் சேரந்த காவலர்கள் சுமார் 10,000 பேர் செவ்வாய்க்கிழமை நண்பகலுக்கு சென்னைக்கு வரும்படி டிஜிபி தே.க.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

அவர்கள் சென்னைக்கு வந்ததும் நேரு உள்விளையாட்டரங்கில் தங்களது பெயரை பதிவு செய்துவிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். அவர்கள் தங்குவதற்காக சென்னையில 500 திருமண மண்டபங்கள், சமூக நலக்கூடங்கள், விளையாட்டு அரங்குகள் ஆகியவற்றில் ஏற்படாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இறுதிச் சடங்கு முடிந்த பின்னரே வெளிமாவட்டங்களுக்கு செல்வார்கள் என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.