செய்திகள்

எண்கவுண்டர் செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் குப்பு தேவராஜ் உடல் நல்லடக்கம்

கேரள மாநில மலப்புழா அருகே கடந்த மாதம் 24-ஆம் தேதி கேரள போலீஸால் எண்கவுண்டர் செய்யப்பட்ட சிபிஐ(மா) தலைவர் குப்பு தேவராஜின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கோழிகோடு நகரத்தில் நடைபெற்ற இறுதி நிகழ்வில் மனித உரிமை ஆர்வலர், மவோயிஸ்ட் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.  மூத்த மாவோயிஸ்ட் தலைவரும் முன்னாள் நக்ஸ்லைட்டுமான ஏ. வாசு இறுதி நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.

முன்னதாக பாஜகவினர் பொது இடத்தில் அஞ்சலிக்காக வைக்கக் கூடாது என தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனால் பொதுமக்கள் பார்வைக்கு குப்பு தேவராஜின் உடலை வைக்க போலீஸார் மறுத்து, மனித உரிமை ஆர்வலர்களின் தொடர் வலியுறுத்தலுக்குப் பிறகு இறுதி அஞ்சலி செலுத்த மட்டும் ஒப்புக்கொண்டனர்.