மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதாவின் நினைவாக எதிர்வரும் சனிக்கிழமை  அவர் நடித்த பட்டிக்காடா பட்டணமா திரைப்படத்தை திரைப்படவிருக்கிறது தமிழ் ஸ்டுடியோ.
இதுகுறித்து தமிழ் ஸ்டுடியோ அருண் வெளியிட்ட அறிவிப்பு:
10-12-2016, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு.
 
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
 
திரையிடப்படும் படம்: எங்கிருந்தோ வந்தாள்.
மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதாவின் நினைவாக எதிர்வரும் சனிக்கிழமை மாலை 6 மணியளவில் அவர் நடித்த பட்டிக்காடா பட்டணமா திரைப்படம் திரைப்படவிருக்கிறது.  அவருக்கு நினைவாஞ்சலிக் கூட்டமும் நடைபெறவிருக்கிறது. நண்பர்கள் திரளாக பங்கேற்று மறைந்த முதல்வர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பங்கேற்க விரும்பும் நண்பர்கள் முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் இடவசதியை உறுதி செய்ய முடியும். 9566266036, 044 42164630