காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமறுத்தாலும், வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதாலும் சாகுபடி செய்த பயிர்கள் கருகி அழிந்தன. இதனால் ஏற்பட்ட கடும் சேதத்தால் மனம் உடைந்த விவசாயிகள் தற்கொலை மற்றும் அதிர்ச்சியால் மரணம் – என உயிர் பலியாகி வருகிறார்கள். இது வரை 3 பெண்கள் உட்பட 25 பேர் மரணமடைந்திருப்பது மரணமடைந்திருக்கிறார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு இறந்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம்.

1.திருவத்துறைப்பூண்டி ஒன்றியம், ரெகுநாதபுரம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் வயலில் தற்கொலை.

 1. கோட்டூர் ஒன்றியம், ஆதிச்சபுரத்தை சேர்ந்த அழகேசன் தற்கொலை.

 2. கொரடாச்சேரி ஒன்றியம் முசிறியம் கிராமத்தை சேர்ந்த சேகர் – வயது 52, தற்கொலை. 2 ஏக்கர் நிலம்.

 3. கோட்டுர் ஒன்றியம் திருக்களார் நடராஜன் – வயது 75, அதிர்ச்சி மரணம் – 5 ஏக்கர் நிலம்.

 4. கோட்டுர் ஒன்றியம் பாளையங்கோட்டை அசோகன் -வயது 55, வங்கியில் மயங்கி விழுந்து மரணம். 6 ஏக்கர் நிலம்.

நாகப்பட்டினம் மாவட்டம்.

 1. கீழ்வேளுர் சரகம், எரவாஞ்சேரி ஊராட்சி, பரங்கி நல்லூர் எஸ்.ஜெயபால் -வயது 57, குத்தகை விவசாயி வயலில் அதிர்ச்சி மரணம்.

 2. கீழ்வேளுர் ஒன்றியம் வெண்மணி ஊராட்சிக்குட்பட்ட, கீழகாவாலகுடி நவநீதம் மயங்கி விழுந்து மரணம்.

 3. கீழ்வேளுர் அருகே உள்ள சங்கமங்களம் கிராமம், தெற்குவெளி மாதா கோவில் தெருவை சேர்ந்த அந்தோனிசாமி வயது – 62, இவருக்கு சிக்கல் கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. மாரடைப்பால் மரணம்.

 4. தலைஞாயிறு ஒன்றியம், பிரிஞ்சுமூலை கிராமத்தை சேர்ந்த முருகையன் தூக்குப் போட்டு தற்கொலை. 10. முருகையனுக்கு குத்தகைக்கு நிலம் கொடுத்த பாலசுப்பிரமணியம் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட நிலையில் மாரடைப்பால் மரணம்.

 5. கீழ்வேளுர் அடுத்துள்ள இருக்கை காலணி சேர்ந்த தனுசம்மாள் – வயது 67, வயலில் சுருண்டு விழுந்து மரணமடைந்தார். இவருக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது.

 6. தலைஞாயிறு ஒன்றியம் நீர்மூலை செவந்து மனைவி ஜெகதாம்பாள் மாரடைப்பால் மரணம் – 3 1/2 ஏக்கர் நிலம்.

 7. கீழையூர் மாரியம்மாள் கோவில் தெரு மாரிமுத்து வயது – 67, மாரடைப்பால் மரணம் – 6 ஏக்கர் நிலம்.

14.சீர்காழி அடுத்துள்ள ஆலாலசுந்தரம் ஊராட்சிக்குட்பட்ட அழகிய நத்தம் கிராமத்தை சேர்ந்த ரத்தினசபாபதி வயது – 60, வயலில் மயங்கி விழுந்து மரணம், 3 ஏக்கர் நிலம்.

 1. கீழையூர் மெயின் ரோடு, ராஜகுமாரன் – 65, நடுக்கட்டளையில் 8 ஏக்கர்நிலம், மாரடைப்பால் மரணம்.

தஞ்சாவூர் மாவட்டம்

 1. பட்டுக்கோட்டை வட்டம் பொன்னவராயன் கோட்டை, உக்கடை மாசிலாமணி வயது 55, 2 ஏக்கர் நிலம், விஷம் அருந்தி தற்கொலை.

 2. திருவையாறு ஒன்றியம் திருப்பந்துருத்தி ராஜேஷ்கண்ணா மற்றும் வெள்ளையன் மாரடைப்பால் மரணம்.

 3. திருப்பணந்தாள் ஒன்றியம் மணக்குண்ணம் மேலத் தெருவை சேர்ந்த ராமசந்திரன் மனைவி கீர்த்திகா வயது – 39, அதிர்ச்சி மரணம், 2 ஏக்கரில் 1 ஏக்கர் சாகுபடி.

தூத்துக்குடி மாவட்டம்

 1. கயித்தாறு அருகில் உள்ள தெற்கு மயிலோடை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த லெட்சுமணன் மகன் முருகன் வயது 31, 10 ஏக்கரில் பாசிப்பயிறு சாகுபடி விஷ‌ம் குடித்து மரணமடைந்தார்.

நெல்லை மாவட்டம்

 1. சீவலபேரி அடுத்துள்ள மடத்துப்பட்டி கீழத் தெருவை சேர்ந்த விவசாயி தாவீது வயது – 55, 2 ஏக்கர் சொந்த நிலம், 6 ஏக்கர் குத்தகை சாகுபடி. விஷ‌ம் குடித்து தற்கொலை.

திருச்சி மாவட்டம்

 1. திருவெறும்பூர் மைக்கேல் வயது – 80, மாரடைப்பால் மரணம்.

 2. குளித்தலை அடுத்துள்ள மேலவதியத்தை சேர்ந்த சங்கரப்பிள்ளை வயது -57, 7 ஏக்கர் நெல், வாழை பயிரிடப்பட்டுள்ளது. இவர் மாரடைப்பால் மரணம்.

திருவள்ளுர் மாவட்டம்

 1. பூண்டி ஒன்றியம், சோம தேவன்பட்டு கிராமம், எத்திராஜ், மாரடைப்பால் மரணம் 8 ஏக்கர்நிலம் சாகுபடி.

ஈரோடு மாவட்டம்.

 1. கொடுமுடி அருகில் உள்ள வெங்க மேட்டுரை சேர்ந்த முத்துசாமி கவுண்டர் வயது 70, 3 1/2 ஏக்கர் நிலத்தில் மஞ்சள் குத்தகை சாகுபடி பூச்சிமருந்து குடித்து தற்கொலை.

 2. வெங்கம்பூர் கிராமம், கரட்டுப் பாளையத்தை சேர்ந்த ராமலிங்கம் வயது – 55, தற்கொலை.

விவசாயிகள் மரண நிகழ்வுகள் தொடர்வது, மிகுந்த கவலை அளிக்கின்றது. வடகிழக்கு பருவமழை பொய்த்தபோன நிலையில், காவிரி நதிநீர் தமிழகத்திற்கு கிடைக்காத நிலையில், தமிழ்நாடு முழுவதும் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதுடன், கடும் குடிநீர்த் தட்டுப்பாடும் ஏற்பட்டு கால்நடைகளையும் பராமரிக்க முடியாத பேராபாயம் ஏற்பட்டு வருவதை உணர முடிகின்றது.

வரும் முன் காக்கும் நடவடிக்கையாக, தமிழகத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவித்து போர்க்கால அடிப்படையில் வறட்சி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசிடமிருந்து பேரிடர்கால நிதி உதவியை பெறவும் நடவடிக்கை எடுத்திடல் வேண்டும்.

தற்கொலை செய்து கொண்டும் அதிர்ச்சியாலும் மரணமடைந்துள்ள விவாசாயிகள் குடும்பததிற்கு தலா ரூ 25 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும்.

நம்பிக்கை இழந்துள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக விவசாயக் கடன்கள் அனைத்தையும் ரத்து செய்யவும், விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 30 ஆயிரம் வீதமும், விவசாயத் தொழிலாளர் குடும்பத்திற்கு தலா ரூ 25 ஆயிரம் வீதமும், இழப்பீடு வழங்கிட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறது.