வர்தா புயல் காரணமாக பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்களுககு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புயலின் தாக்கம் அதிவேகமாக இருக்கும் என்று தெரிந்த நிலையிலும் நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது. வழக்கறிஞர் பிரதாபன் ஜெயராமன் தன்னுடைய முகநூல் பக்கத்தில்,

“இயற்கை சீற்ற காலத்தில் கூட நீதிமன்றம் இயங்கும் என அறிவிப்பது எந்த வகையில் நியாயம்? வழக்கறிஞர்களும் வழக்காடிகாலும் மனிதர்கள் இல்லையா? டிசம்பர் 6 அன்று அறிவித்ததுபோல ஏன் விடுப்பு அளிக்க கூடாது?” என கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது வரை உயர் நீதிமன்ற வளாகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடைய 15 மரங்கள் விழுந்துள்ளன எனவும் தெரிவிக்கிறார்.

hc