மூன்று மாவட்டங்களை புரட்டிப் போட்ட வர்தா புயல், பிரதமர் நரேந்திர மோடியின் அதிரடி கருப்புப் பண ஒழிப்பு திட்டமான கேஸ்லெஸ் எகானமி எனப்படும் பணத்தாள்களுக்குப் பதிலாக கார்டுகளை பயன்படுத்தும் திட்டத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. 10 ஆயிரம் மின்கம்பங்களை சரித்த புயல், தொலைத் தொடர்பு கோபுரங்களையும் கடுமையாக பாதித்துள்ளது. இதனால் பணமில்லாப் பரிவத்தனைக்கு பயன்படுத்தப்பட்ட டெபிட், கிரெடிட் கார்டுகள் பயன்படுத்த முடியவில்லை. புயல் காரணமாக ஏ டி எம்களில் பணம் நிரப்படாத சூழ்நிலையில் உணவுப்பொருட்கள், பெட்ரோல்  உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். இந்த நிலைமையை தொலைத் தொடர்பு சேவை இணைப்புகள் விரைவில் சீரமைக்க வேண்டும் என தமிழக அரசு சம்மந்தப் பட்ட தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.