மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாக கருதப்பட்ட சசிகலாவுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் அவரை போயஸ் இல்லத்தில் சந்தித்தார் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா. பாண்டியன். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெயலலிதா மறைந்தபோது கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சசிகலா உட்பட யாரையும் அப்போது சந்தித்து பேச இயலவில்லை. அதனால் இன்று சசிகலாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். நானும் சசிகலாவும் அரசியல்வாதி. போயஸ் கார்டனுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான மக்களும் கூட அரசியல்வாதிகள். சசிகலாவுக்கு பின்னால் மக்களின் சக்தி இருக்கிறது”என தா. பாண்டியன் கூறினார்.

இந்த சந்திப்பின் போது வழக்கமாக தா. பாண்டியன் அணியும் சிவப்புத் துண்டு அவருடைய தோள்களிலிருந்து இறங்கி கைகளில் இருந்தது. இந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்புச் செய்தியாகியுள்ளது. சமூக ஊடகங்களில் சில கருத்துகளை இங்கே பகிர்கிறோம்…

Mathi Vanan: ஜெயலலிதா மரணத்தின் பின் சசிகலாவைச் சந்தித்து CPI கட்சியின் மூத்த தலைவர் த. பாண்டியன் ஆறுதல் சொன்னாராம்… அப்படியென்ன தேவை என்று நமக்குத் தெரியவில்லை. அது நிற்க, அவர் கையில் உள்ள சிவப்புத் துண்டை கவனியுங்கள். பார்க்க முதல் படம்.

முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ், புரட்சி பாரதம் பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோரும் சசிகலாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்களாம். இன்று டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளேட்டின் அதிபர் சாந்தி ரெட்டி, அதன் ஆசிரியர் பகவான்சிங் ஆகியோரும் சசிகலாவை நேரில் சந்தித்தனர். அது இரண்டாவது படம்.

சிவப்புத் துண்டு அடிமைகளின் அடையாளம் ஆனதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்? அவமானங்களை அழிக்க என்ன வழி?

Shunmugam Ganesan:

உதிரத்தால் சிவந்த செங்கொடியை இறக்கமாட்டோம்
உயிரை வேண்டும்மாலும் இழப்போம் என்று இன்னுயிரை இழந்த வெண்மணி தியாகிகள் உயர்த்திபிடித்த செங்கொடி…
இடிப்பில் துண்டு கட்டமாட்டோம்
தோளில் சிவப்பு துண்டை போடுவோம்
என்று கீழ்தஞ்சை விவசாயதொழிலாளர்களின் வாரிசு நாங்க..
பாவம் சிலபேருக்கு புரிந்தால் சரி

Raghavendra Aara:

துண்டு
அரைக் கம்பத்தில்
பறக்கக் காரணம்
துக்கமா…
அல்லது!

Natarajan:

‘மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவுக்குத் தலைமை ஏற்று வழிநடத்தக்கூடிய பொறுப்பும், தகுதியும் சசிகலாவுக்குத்தான் உள்ளது.’ – தா.பாண்டியன்.

இதுதான்யா கம்யூனிசம். தன்னைப் பத்தியோ, தன் கட்சியைப் பத்தியோ கவலைப்படாம பிறரைப் பத்திக் கவலைப்படற பெருந்தன்மை!

நீங்க இதே ரூட்ல போங்க மிஸ்டர் தா.பா!