தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே குழிமாத்தூர் கிராமம் குடியானத் தெருவை சேர்ந்த அரவிந்த். இவர், 13 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்திருந்தார். ஆனால் போதிய அளவில் காவிரியில் நீர் திருந்துவிடப்படாத காரணத்தாலும், மழை பெய்யாததாலும் 10 ஏக்கர் நெற்பயிர்கள் கருகிப்போயின. இதனால்  அரவிந்த் கடந்த மனவேதனையுடன் காணப்பட்டிருக்கிறார். பயிர் கருகிய சோகம் தாங்க முடியாமல் வயலுக்காக வாங்கி வைத்திருந்த பூச்சிமருந்தை குடித்து அரவிந்த் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள், தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் சிசிச்சை பலனின்றி அரவிந்த் உயிரிழந்தார்.

பயிர் கருகியதைக் கண்டு மரணமடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 25ஐத் தாண்டியிருக்கிறது.  தமிழக அரசு அதுகுறித்து எவ்வித சலனமும் இல்லாமல் இருக்கிறது.