தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ தொடர்ச்சியாக, சினிமாவின் வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்த நூறு கலைஞர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வை நடத்தி வருகிறது.

இன்று இயக்குனர் ராஜூமுருகனுடன் கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது. ராஜூமுருகன் குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். சினிமாவில் அரசியலின் தேவை, அரசியல் சினிமாவிற்கான திரைக்கதை அமைப்பு உள்ளிட்டவை குறித்து உரையாடலாம் என தமிழ் ஸ்டுடியோ தெரிவித்துள்ளது.

17-12-2012, சனிக்கிழமை, மாலை 5.30 மணிக்கு.

பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.