தமிழக தலைமை செயலாளர் வீட்டில் வருமானவரித்துறையினர் நடத்திவரும் சோதனைக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ள அவர், முன்பு டெல்லி அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளர் வீட்டில் சோதனை நடத்தி, அவமதிப்பு செய்தது மத்திய அரசு, தற்போது தமிழகத்தில் அதுபோல நடக்கிறது எனவும் இது ஜனநாயகத்துக்கு எதிரானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தவறான நடவடிக்கை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பணப்பறிமாற்றம் செய்து அமித் ஷா உள்ளிட்டவர்களிடம் ஏன் சோதனை நடத்தப்படவில்லை எனவும் மம்தா கேள்வி எழுப்பியுள்ளார்.