திமுக தலைவர் மு. கருணாநிதி அண்மையில் காவேரி மருத்துவமனையில் உடல் நலக் குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய உடல்நலம் குறித்து பல்வேறு துறை விஐபிகள் நேரில் சென்று விசாரித்தனர். இந்நிலையில் காவேரி மருத்துவமனை கருணாநிதியின் உடல்நிலை குறித்து புகைப்படத்துடன் கூடிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் திமுக தலைவர் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறார். விரைவில் கருணாநிதி சிகிச்சையை முடித்துக்கொண்டு வீடு திரும்புவார் என மருத்துவமனை அறிக்கை கூறுகிறது.