சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய நெருங்கிய சகாவான சீனிவாசலுவும் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இருவரும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுனர். ஜனவரி 3-ஆம் தேதி வரை காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் மற்றும் மணல் குவாரி தொழில் செய்து வரும் சேகர் ரெட்டி முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்துடனும் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவுடனும் நெருக்கமாக உள்ளவர். ராம் மோகன் ராவ் வீட்டில் காலையிலிருந்து வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

முன்னதாக சேகர் ரெட்டி வீட்டில் ரூ.131 கோடி பணம் மற்றும் 170 கிலோ தங்கம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ரூ. 30 கோடி அளவுக்கு புதிய 2000 ரூபாய்களாக கைப்பட்டது குறிப்பிடத்தக்கது.