சென்னையில் தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிகாலை முதல் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலுரைச் சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடுகள், அலுவலகங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வருமான வரித்துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில், 131 கோடி ரூபாயும், 171 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. சேகர் ரெட்டி பணம் பதுக்கியதில் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. குறிப்பாக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமானவராக பேசப்பட்டது.

இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தி வருகிறது. சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டிலும் திருவான்மியூரில் உள்ள அவருடைய மகன் வீட்டிலும்  சோதனை நடைபெறுகிறது.