தமிழக தலைமை செயலாளர் ராம் மோகன் ராவுக்குச் சொந்தமான சென்னை அண்ணா நகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ராம்மோகன் ராவின் உறவினர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் தமிழக தலைமை செயலகத்தில் உள்ள தலைமை செயலாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையை தொடங்கியுள்ளனர். வரலாற்றில் தலைமை செயலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவது இதுவே முதன் முறை என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.