அதிமுக. செயற்குழு, மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

பொதுக்குழுவில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், ஜெயலலிதாவிற்குப் பின்னர் வி.கே. சசிகலாவிடம் அதிமுக தலைமை பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது என்ற தீர்மானமும் ஒன்று.

இதையடுத்து வானகரத்தில் கூட்டம் நடைபெற்ற ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபம் முன்பாக வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா மட்டுமே இருக்கும் பேனர் அகற்றப்பட்டது.

ஜெயலலிதா புகைப்படம் மட்டுமே இருந்த பேனர் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக சசிகலாவுடன் – ஜெயலலிதா இடம் பெற்றிருக்கும் புதிய பேனர் வைக்கப்பட்டது.

 

அது மட்டுமல்லாமல், சென்னை முழுவதும் சசிகலாவின் புகைப்படங்கள் , போஸ்டர்கள், பேனர்கள், சட்டென்று இடம் பிடித்துள்ளன. இவை எதுவும், இன்று காலை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.