Rendezvous with Simi Garewal (ரான்டேவூ வித் சிமி கரேவல்) ஜெயலலிதாவின், மிகப்பிரபலமான பேட்டி இது. இதில் சசிகலாவுக்கும் தனக்குமான நட்பு பற்றி ஜெயலலிதா கூறி இருந்ததை மேற்கோளிட்டே, அதிமுக பொதுக்குழுவில் சசிகலா தலைமையில் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதியேற்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த பேட்டியில், சசிகலா பற்றி ஜெயலலிதா கூறியதின் தமிழாக்கம் கீழே….

சிமி: சசிகலாவுடானன உங்கள் சிநேகம் இத்தனை விமர்சனங்களை சந்தித்த பின்னும், நீங்கள் அதை தொடருவது ஏன் ? சசிகலாவை விட்டுக்கொடுக்காமல் இருப்பது ஏன் ?

ஜெ:  என் மீதான அவருடைய விசுவாசத்தின் காரணமாகவே, மற்றவர்களால் மிகத்தவறாக சித்தரிக்கப்பட்ட,  புரிந்துகொள்ளப்பட்ட ஒரு பெண் அவர்.எனக்காக அவர் மிக சிரமப்பட்டிருக்கிறார். உங்களுக்கு தெரியுமா ? அவர் ஒரு வருடம் சிறை அனுபவித்திருக்கிறார். என்னுடனான நட்பு மட்டும் இல்லையென்றால், அவரை யாருமே இந்தளவு தொந்தரவு செய்திருக்க மாட்டார்கள்.

பரபரப்பான அரசியல் வாழ்க்கையை மேற்கொள்ளும் ஒருவரால், அவருடைய குடும்பத்தையும் கவனித்து கொள்வது என்பது இயலாத காரியம். பெரும்பாலான ஆண்களுக்கு இது புரிவதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு வீட்டில் மனைவியோ அல்லது வேறு யாரோ இருப்பார்கள். ஆண்கள்தான் எங்களுடைய நட்பை கொச்சைப்படுத்துகிறார்கள்.

எனக்கான ஷாப்பிங்கை கூட நான் செய்ய முடியாது. எனக்கான பொருட்களை யாராவது எனக்கு வாங்கி வர வேண்டும். என்னுடைய குடும்பத்தை எனக்காக யாராவது நிர்வகிக்க வேண்டும். அதைத்தான் அவர் செய்கிறார். என்னுடன் பிறக்காத சகோதரி அவர். என் அம்மாவின் இடத்தை, நிரப்பிய பெண் அவர்.

 

*முழு    பேட்டியையும்  “அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி இங்கு படிக்கலாம்