காங்கிரஸ் கட்சியில் ஊடகப் பேச்சாளராக இருக்கும் ஜோதிமணி மீது பாஜக ட்ரோல்கள் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களிலும் தொலைபேசியிலும் ஆபாசமாக பேசி வருகின்றனர். பலர் கண்டனம் தெரிவித்தும் பாஜகவினர் தொடர்ந்து அவதூறுகளை பேசி வருகின்றனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரன், ஜோதிமணிக்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் பதிவிட்டுள்ளார்.

“ஒவ்வொருவரும் சுதந்திரமாக சிந்திக்கவும் ,பேசவும், கருத்துச் சொல்லவும் அரசியல் சாசனச் சட்டப்படி உரிமை உள்ளது. கரூரைச் சார்ந்த சகோதரி ஜோதி கூறிய கருத்திற்கு பதில் சொல்ல முடியாத ஆர்.எஸ்.எஸ். வலதுசாரி கும்பல் அவர் மீது இழிவாக வசைமாரி பொழிவதும், கீழ்த்தரமான வார்த்தைகளில் விமர்சிப்பதுமாக இருக்கிறார்கள். கருத்துக்கு பதில் சொல்ல முடியாத பலவீனமான நிலையில்தான் இப்படிப்பட்ட வார்த்தைகள் வரும். இத்தகைய வசைமொழிகளை அதிலும் ஒரு பெண்மீது பொழிவது கடும் கண்டனத்துக்கு உரியது” என அவர் தெரிவித்துள்ளார்.