செய்திகள்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது போலீஸ் தாக்குதல்: மக்கள் அதிகாரம் கண்டனம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீதான போலீஸ் தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ளது மக்கள் அதிகாரம் அமைப்பு. இவ்வமைப்பின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் செழியன் வெளியிட்ட அறிக்கையில்,

“ரூ1000, ரூ500 செல்லாது என மோடி அறிவித்து 50 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. கருப்பு பணம் ஒழிந்ததா?, கள்ளப்பணம் இனி வராமல் ஒழியுமா? லஞ்ச ஊழல் ஒழிந்ததா? என்பதை மோடி சொல்லமாட்டார். ஏனென்றால் அவற்றை ஒழிக்க முடியாது என்பது மோடிக்கு தெரியும். தினம் ஒரு பொய்யை சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார். 50 நாட்கள் மக்கள் துன்பத்தை பொறுத்து கொள்ள வேண்டும் என்றார். இன்றும் வங்கி வாசலில் ஏடி.எம். வாசலில் நாடு முழுவதும் மக்கள் கோடிக்கணக்கில் வரிசையில் நிற்கிறார்கள். போட்ட பணத்தை எடுக்க விடாமல் ரொக்க பொருளாதாரத்தை அழிப்பதன் மூலம் வேலையிழந்து வீதிக்கு வந்த விவசாயிகள் தொழிலாளிகள் கோடிக்கணக்கில்.

மோடியின் பணமதிப்பு நீக்க அறிவிப்பால் தனியார் வங்கிகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் இணையதளத்தின் மூலம் வர்த்தகம் செய்ய விளம்பரம் செய்யும் குஜராத் மார்வாடி பனியா சேட்டுகள் மற்றும் சில வெளிநாட்டு கம்பெனிகள்தான். லாபம் அடைய போகின்றது. இதற்காக கோடிக்கணக்கான மக்களின் சம்பளப் பணத்தை, சேமிப்புகளை பலவந்தமாக வழிப்பறி செய்யதான் மோடியின் இந்த பணமதிப்பு நீக்க அறிவிப்பு என்பது நிரூபணம் ஆகியுள்ளது. மோடியின் இந்த தவறான உத்திரவை எதிர்த்து அனைத்து கட்சிகளும் இயக்கங்களும், பொதுமக்களும் நாடு முழுவதும் போராடி வருகிறார்கள். அரசு இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் காவல் துறை மூலம் போராடுபவர்கள் மீது அடக்குமுறை செய்வது வன்மையாக கண்டிக்கதக்கது. இதன் மூலம் பிரச்சினை அதிகரிக்கத்தான் செய்யும் என்பதை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

31.12.2016 அன்று மேடவாக்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்  போராட்டம் நடத்தினர். போராடிய பெண் ஒருவரிடம் பள்ளிக்கரணை காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாலியல் சீண்டல் செய்ததை கண்டித்து போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கடத்திக்கொண்டு போகிறது, காவல்துறை வண்டியிலேயே வைத்து துப்பாக்கியால் கடுமையாகத் தாக்குகிறது. இதைக்கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி மண்டையை உடைக்கிறது. 14 பேர்களை சிறையில் அடைக்கிறது. செய்தியாளரின் கேமரா உடைக்கப்படுகிறது. மக்களை பாதுகாப்பதாகச் சொல்லும் போலீசே பொறுக்கித்தனமாக பாலியல் வன்முறையில் ஈடுபடுவதும் அதை எதிர்த்துக்கேட்டால் தாக்குவதும் சிறையில் அடைப்பதும் எந்த சட்டத்தில் இருக்கிறது.

காவல் துறையின் இந்த அராஜகத்தை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. தவறிழைத்த காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருவதுடன் பணப்பிரச்சினையை தீர்க்காமல் தமிழக அரசு நடைப்பிணமாக இருப்பதற்கு எதிராகவும் மக்கள் போராட வேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.