விவசாயிகள் மரணம் குறித்து முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆறுதல் தெரிவித்து ஒரு அறிக்கைகூட வெளியிடவில்லை என‌ அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 5-ம் தேதி விவசாயிகள் மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்குமாறு திமுக பொருளாளரும், எதிர்கட்சி தலைவரும் ஆன மு.க.ஸ்டாலினை சந்தித்து பி.ஆர். பாண்டியன் கேட்டுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தண்ணீர் இன்றி தினம்தோறும் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது ஒருபக்கம் இருந்தாலும் வருத்தத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ‘விவசாயிகள் மனம் தளரவேண்டாம். தற்கொலை செய்துகொள்ள வேண்டாம்’ என முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஒரு அறிக்கைகூட‌ வெளியிடவில்லை” என தெரிவித்தார்.