கவுதம் ராஜன்

தமிழகத்தின் தொன்மைமிகு கல்வி நிலையங்களில் ஒன்றான , சென்னையின் முக்கிய கல்லூரிகளில் ஒன்றாக இருப்பது மாநிலக் கல்லூரி. இங்கு, அனைத்து தரப்பு மாணவர்களும் தங்களது பட்ட படிப்புகளை இருபாலர் படித்து வருகின்றனர். மாணவர்கள் தங்குவதற்கென்று, விக்டோரியா என்ற பெயரில் மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயின்ற பல மாணவர்கள் இன்று, சமூகத்திலும், அரசியலுலிம் சிறப்பான நிலையை எட்டி உள்ளனர்.

இந்நிலையில், சில காலங்களாக, இக்கல்லூரியில் சாதியை முன்வைத்து பல்வேறு பிரச்சனைகள் எழுப்பப் பட்டு வருகின்றது. இதற்கு சான்று, இந்த கல்லூரியும். மாணவர்களின் விடுதியும் தான். இந்து சாதி பின்னணிக் கொண்டவர்களால், ஒடுக்கப்பட்ட மாணவர்கள் எப்போதும் தாக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். இது போன்ற தாக்குதல் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கையில், கல்லூரி நிர்வாகத் தரப்பில் இருந்து, நிரந்த தீர்வினை எட்ட எந்த விதமான செயல்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில், சனவரி 1 அன்று இரவு வன்னியர் சமூகத்தை சார்ந்த மாணவர்களுக்கும் தலித் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, பின்னர் தலித் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் முன்விரோதம் காரணமாக, நடத்தப்பட்டதாக மாணவர்கள் மத்தியில் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில், தலித் சமூகத்தை சேர்ந்த இரண்டாமாண்டு பயின்று வரும் மாணவருக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இன்று (3.1.2017) காலை 11 மணியளவில், வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள், தலித் மாணவர்கள் கல்லூரிக்குச் சென்றிருந்த சமயத்தில், விடுதியில் இருந்த அறைக்குச் சென்று, அறையின் உள்ளே மாட்டப்பட்டிருந்த அம்பேத்கர் புகைப்படத்தை கிழித்து, அதனருகில் செருப்பினை மாட்டியுள்ளனர் . மேலும் மாணவர்களின் அசல் (ஒரிஜினல்- orijinal) கல்வி மற்றும் சாதிச் சான்றிதழ்களைக் கிழித்துப் போட்டுள்ளனர். இது போன்ற செயல்களில் ஈடுபட்ட மாணவர்கள் யார், யார் என்று தெரிந்தும், கல்லூரி நிர்வாகம் இது தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.

pre-college-2

தமிழகத்தின் அனைத்து விதமான சூழலுக்கும், துண்டிவிட்ட அடையாள அரசியல் தலைவர்கள் என்ன செய்யப்போகின்றனர்.?

இதன் பின்னணியில் இருப்பவர் யார்? தமிழகத்தில் இவ்விதமான கல்வி நிலையத்தாக்குதல் யாருடைய நன்மைக்காக செய்யப்படுகிறது?

இந்த மாணவர்களின் பின்புலம் என்ன?
கிழிக்கப்பட்டது மாணவர்களின் வாழ்க்கையா? அல்லது தமிழக தலித் கல்விச் சூழலா?
எதற்காக கல்வி?

IIT முதல் அரசு தொடக்கப் பள்ளி வரை தலைவிரித்தாடும் சாதித் தாக்குதல் எத்தகையது?

Photos: கவுதம் ராஜன்