விவசாயிகள் அடுத்தடுத்து மரணமடைந்துவரும் நிலையில் இன்று அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார் தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயிகளின் உயிரிழப்பும் விவசாயிகளுக்கு நிவாரணம், வறட்சி நிலை சமாளிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று காலை 9 மணிக்கு முதலமைச்சர் தலைமையில் தொடங்கிய அமைச்சரவைக்கூட்டம் ஒரு மணி நேரத்தில் முடிந்தது. கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.