“ராண்டேவூ வித் சிமி” என்கிற நிகழ்ச்சி மட்டுமே இன்று வரை ஜெயலலிதாவின் சிறந்த பேட்டியாக கணிக்கப்படுகிறது. எடிட் செய்யப்படாத அந்த பேட்டியின் முழு பதிப்பையும், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், நிகழ்ச்சி தொகுப்பாளர் சிமி தன்னுடைய யூ டியூபில் வெளியிட்டு இருக்கிறார். வெளிவராத இந்த பகுதியில் மிக சுவாரஸ்யமான, கூடுதல் வெளிப்படையான ஜெயாவை பார்க்க முடிகிறது. அதையும் உங்களுக்காக தமிழில் மொழி பெயர்த்து அளித்திருக்கிறோம்.

*********

சிமி: உங்களுடைய பள்ளி தோழிகளின் கிண்டல் காரணமாக, சினிமாத்துறை என்பது, தகுதியான துறை அல்ல எண்ணம் உங்களுக்கு வந்திருக்க வாய்ப்புண்டா ?

ஜெ: இல்லை. எனக்கு சினிமாத்துறையில் விருப்பமில்லை. ஒருவேளை, என்னுடைய படிப்பை தொடர எனக்கு வாய்பளிக்கப் பட்டிருக்குமானால், ஆராய்ச்சியாளராக ஆகி இருப்பேன். ஏராளமான ஆராய்ச்சி படிப்புகளில் என்னை ஈடுபடுத்தி இருப்பேன். அமார்த்ய சென்-னை போல், நானும் ஒரு நாள், நோபல் பரிசை வென்றிருப்பேன். 

*********